பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க 1 லட்சம் மரக்கன்றுகள் தயார்


பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க 1 லட்சம் மரக்கன்றுகள் தயார்
x

பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க 1 லட்சம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளது என்று நெல்லை மாவட்ட வன அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி

தமிழகத்தில் வனம் மற்றும் மரங்களின் பரப்பளவை அதிகரித்து புவி வெப்பமாவதை தடுக்க அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. அந்த வகையில் பசுமை தமிழக இயக்கத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகள், பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் நெல்லை மாவட்டத்திலும் இலவச மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை கங்கைகொண்டான் மற்றும் கொக்கிரகுளம் நாற்றங்காலில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. தற்போது தேக்கு, செம்மரம், வேங்கை, வேம்பு, புங்கன், புளி, நீர்மருது, பலா, நெல்லி, கொய்யா, குமிழ், இலுப்பை உள்ளிட்ட மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து சுமார் 1 லட்சம் மரக்கன்றுகள் வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. எனவே இந்த மரக்கன்றுகளை இலவசமாக பெற நெல்லை வனச்சரகர் சரவணகுமார் 9994635352, வனவர் புஷ்பராஜ் 7397057966, மாவட்ட வன அலுவலகம் 04622553005, 04622903605 தொடர்பு கொள்ளலாம்.

மேலும் www.greentnmission.com இந்த இணையதள முகவரியில் கோரிக்கை பதிவு செய்து பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த திட்டப் பணிகளை மேற்கொள்ள ஒரு தற்காலிக பணியாளர் நியமிக்கப்பட இருக்கிறார். விருப்பமுள்ள நபர்கள் தங்கள் விண்ணப்பித்தினை வருகிற 25-ந் தேதிக்குள் நெல்லை மாவட்ட வன அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை மாவட்ட வன அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.


Next Story