விவசாயிகளுக்கு வழங்க 1½ லட்சம் மரக்கன்றுகள்


விவசாயிகளுக்கு வழங்க 1½ லட்சம் மரக்கன்றுகள்
x

விவசாயிகளுக்கு 1½ லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நீடித்த விவசாய நிலத்தில் பசுமை போர்வை இயக்கம் 2022-23-ன் கீழ் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வினியோகம் செய்ய அனைத்து வட்டாரங்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வனப்பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதத்திற்கு உயர்த்துவதற்காக தமிழக அரசு பண்ணை நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்திட தமிழ்நாடு நீடித்த பசுமை போர்வை இயக்கம் என்னும் திட்டத்தை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உழவன் செயலியில் பதிவு செய்த விவசாயிகளுக்கு பசுமை போர்வை திட்டத்தில் 1 லட்சத்து 65 ஆயிரம் மரக்கன்றுகள் இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.


Next Story