ரூ.3 கோடியே 17 லட்சத்தில் நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம்
ஆடுதுறையில் ரூ.3 கோடியே 17 லட்சத்தில் நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
திருவிடைமருதூர்:
ஆடுதுறையில் ரூ.3 கோடியே 17 லட்சத்தில் நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மாதாந்திர கூட்டம்
கும்பகோணம் அருகே ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. பேரூராட்சி கவுன்சிலர் பரமேஸ்வரி சரவணக்குமார் வரவேற்றார். துணைப் தலைவர் கமலா சேகர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ராமபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் ஆடுதுறை பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3கோடியே 17 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் அமைத்திட ஒப்பந்தக்காரரின் ஒப்பந்த புள்ளியை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேட்டரி வாகனங்கள்
மேலும் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு லித்தியம் மூலம் இயங்கும் ரூ.3 லட்சத்து 94 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் 2 பேட்டரி வாகனங்கள் கொள்முதல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் திறந்த நிலையில் உள்ள வடிகால்களில் மூடி அமைக்கும் பணிகளும், 10-வது வார்டில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் ஹாஜியார் விரிவாக்க நகர் பூங்காவில் பூங்க மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
இதில் கவுன்சிலர்கள் கோசி.இளங்கோவன், ம.க.பால தண்டாயுதம், சுகந்தி சுப்ரமணியன், ரா.சரவணன், முத்துபீவி ஷாஜஹான், சாந்தி குமார், மாலதி சிவக்கொழுந்து, ஆர்.வி.குமார், பி.கண்ணன், செல்வராணி சிவக்குமார், ஷமீம்நிஷா ஷாஜகான் உள்பட பலர் கொண்டனர். முடிவில் கவுன்சிலர் மீனாட்சி முனுசாமி நன்றி தெரிவித்தார்.