1 டன் ஏலக்காய் மூட்டைகள் பறிமுதல்


1 டன் ஏலக்காய் மூட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Oct 2023 2:30 AM IST (Updated: 18 Oct 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

போடியில் வரி செலுத்தாமல் கொண்டு சென்ற 1 டன் ஏலக்காய் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி

போடியில் கட்டபொம்மன் சிலை பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் ரோந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 20 மூட்டைகளில் மொத்தம் ஒரு டன் ஏலக்காய்கள் ஏற்றி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஏலக்காய்களுக்கு வரி செலுத்தாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஏலக்காய் மூட்டைகள், சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வணிகவரித்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாவட்ட வணிக வரித்துறை இணை ஆணையர் உஷா, மாநில வணிக வரித்துறை அலுவலர் கனகராஜ் விரைந்து வந்து ஏலக்காய் மூட்டைகளை சோதனை செய்தனர். வரி செலுத்தாத அந்த நிறுவன உரிமையாளருக்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


Next Story