வாரச்சந்தை, கடைகளில்1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


வாரச்சந்தை, கடைகளில்1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

மோகனூரில் வாரச்சந்தை, கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரசால் தடைசெய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல்

மோகனூர்

திடீர் சோதனை

மோகனூர் பேரூராட்சியில் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதேபோல் நேற்று வாரச்சந்தை கூடியது. இந்தநிலையில் வாரச்சந்தை பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் பயன்படுத்துவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் நேற்று நடைபெற்ற வாரச்சந்தை மற்றும் மோகனூர் பகுதியில் உள்ள கடைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற் பொறியாளர் கார்த்திக் குமுதன் தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

இந்த சோதனையில் வாரச்சந்தை மற்றும் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் பேப்பர் கப்புகள், பைகள் என 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.3,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை யாரேனும் மீண்டும் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுக் கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் எச்சரித்தனர்.


Next Story