சுங்குவார்சத்திரம் அருகே பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


சுங்குவார்சத்திரம் அருகே பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 15 Sep 2023 8:54 AM GMT (Updated: 16 Sep 2023 4:39 AM GMT)

சுங்குவார்சத்திரம் அருகே 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே சந்தவேலூர் ஈ.பி.காலணி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மகாராஜன் வயது (40). இவர் பொதுமக்களிடம் இருந்து இலவச ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி தன் வீட்டில் பதுக்கி வைத்து வடமாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பதாக ஸ்ரீபெரும்புதூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் குடிமை பொருள் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தலைமையில் அதிகாரிகள் ஈ.பி. காலணி பகுதியில் உள்ள மகாராஜன் வீட்டில் ஆய்வு செய்தனர். போலீசார் நடத்திய ஆய்வின்போது அவரது வீட்டில் சுமார் 40 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளும், 20 கிலோ எடை கொண்ட 14 மூட்டைகளும் என மொத்தம் 1080 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் அரிசியை பதுக்கி விற்பனை செய்து வந்த மகாராஜனை போலீசார் கைது செய்து பதுக்கி வைத்திருந்த ஒரு டன் 80 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.


Next Story