கேரளாவுக்கு கார், ஆட்டோவில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு கார், ஆட்டோவில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குழித்துறை அருகே கேரளவுக்கு கார், ஆட்டோவில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

குழித்துறை அருகே கேரளவுக்கு கார், ஆட்டோவில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டது.

தீவிர சோதனை

விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஜ்குமார் கொண்ட குழுவினர் குழித்துறை அடுத்த வெட்டுமணி பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால், கார் நிற்காமல் தேங்காப்பட்டணம் சாைலயை ேநாக்கி வேகமாக சென்றது.

1 டன் ரேஷன் அரிசி

உடனே, அதிகாரிகள் தங்களது வாகனங்களில் காரை விட்டிச் சென்று காப்புக்காடு அடுத்த உதச்சிகோட்டை பகுதியில் வைத்து மடக்கினர். இதையடுத்து டிரைவர் காரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது, அதில் சிறு சிறு மூடைகளாக 1 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காருடன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆட்டோவில்...

மேலும், அதே பகுதியில் மீண்டும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, வேகமாக வந்த ஒரு ஆட்டோவை மடக்கினர். உடனே, டிரைவர் ஆட்டோவை நிறுத்தி விட்டு தப்யோடி விட்டார். இதையடுத்து அதிகாரிகள் ஆட்டோைவ சோதனை செய்தபோது, அதில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும், அரிசியை காப்புக்காடு அரசு குடோனிலும் ஒப்படைத்தனர். மேலும், தப்பி ஓடிய டிரைவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story