குற்றச்சம்பவங்களை கண்காணிக்க 10 கேமராக்கள் பொருத்தம்
சித்தலூரில் குற்றச்சம்பவங்களை கண்காணிக்க 10 கேமராக்கள் பொருத்தப்பட்டது.
தியாகதுருகம்:
தியாகதுருகம் அருகே உள்ள சித்தலூர் ஊராட்சியில் திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி சித்தலூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் பஸ் நிறுத்தம், மந்தைவெளி மற்றும் காலனி ஆகிய பகுதிகளில் 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதனை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் கம்ப்யூட்டரும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை பயன்பாட்டிற்க்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கணபதி தலைமை தாங்கினார். வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இதில் தனிப்பிரிவு ஏட்டு கொளஞ்சி, மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.