நாமக்கல் மண்டலத்தில்முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்வு


நாமக்கல் மண்டலத்தில்முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்வு
x
நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசுகளாக இருந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் நேற்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முட்டை கொள்முதல் விலை 4 ரூபாய் 55 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

தொடர்ந்து 2 நாட்களாக முட்டை கொள்முதல் விலை உயர்ந்ததால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆடி மாதம் முடிய உள்ளதாலும், மீன் வரத்து குறைவு காரணமாகவும் முட்டை நுகர்வு அதிகரித்து வருவதோடு, முட்டை கொள்முதல் விலையும் அதிகரித்து இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.103-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையில் ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கறிக்கோழி விலை ஒரு கிலோவுக்கு ரூ.105 ஆக ஆனது. மேலும் முட்டைக்கோழி கிலோ ரூ.83-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் ஏதும் இல்லை என பண்ணையாளர்கள் கூறினர்.


Next Story