ஆலங்குடி அருகே 10 ஆடுகள் திருட்டு


ஆலங்குடி அருகே 10 ஆடுகள் திருட்டு
x

ஆலங்குடி அருகே 10 ஆடுகள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் ஊராட்சி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 53). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 13-ந் தேதி நள்ளிரவில் வீட்டின் பின்புறத்தில் கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 10 ஆடுகளை மர்ம கும்பல் திருடி சென்றது. இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஆட்டின் உரிமையாளர் ஆறுமுகம், செம்பட்டிவிடுதி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிய கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story