10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Feb 2023 8:15 PM GMT (Updated: 2023-02-03T01:45:31+05:30)
நாமக்கல்

நாமக்கல் அருகே காதப்பள்ளியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நல்லிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அங்கு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் விஜயகுமார் (வயது 32) 10 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story