திருவாரூர் மாவட்டத்தில் 10 லட்சத்து 29 ஆயிரத்து 129 வாக்காளர்கள்


திருவாரூர் மாவட்டத்தில் 10 லட்சத்து 29 ஆயிரத்து 129 வாக்காளர்கள்
x

திருவாரூர் மாவட்டத்தில் 10 லட்சத்து 29 ஆயிரத்து 129 வாக்காளர்கள்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் 10 லட்சத்து 29 ஆயிரத்து 129 வாக்காளர்கள் உள்ளனர் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான காயத்ரி கிருஷ்ணன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம்-2023 தொடர்பாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

அதன்படி திருத்துறைப்பூண்டி (தனி) சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 56 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 19 ஆயிரத்து 928 பெண் வாக்காளர்கள், 4 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 34 ஆயிரத்து 988 வாக்காளர்கள் உள்ளனர்.

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி

மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 463 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 28 ஆயிரத்து 952 பெண் வாக்காளர்கள், 8 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 423 வாக்காளர்கள் உள்ளனர்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 147 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 41 ஆயிரத்து 992 பெண் வாக்காளர்கள், 28 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 167 வாக்காளர்கள் உள்ளனர்.

நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 993 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 538 பெண் வாக்காளர்கள், 20 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 551 வாக்காளர்கள் உள்ளனர்.

10 லட்சத்து 29 ஆயிரத்து 129 வாக்காளர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 5 லட்சத்து 3 ஆயிரத்து 659 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 25 ஆயிரத்து 410 பெண் வாக்காளர்களும், 60 இதர வாக்காளர்களும் என மொத்தம் 10 லட்சத்து 29 ஆயிரத்து 129 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல்கள் திருவாரூர் மற்றும் மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகங்களிலும், அனைத்து தாசில்தார், நகராட்சி அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இதேபோல அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தொடர்புடைய வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். 18-வயது நிறைவடைந்து இதுநாள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களும், 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி 18-வயது நிறைவடைய உள்ளவர்களும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

டிசம்பர் 8-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

இதேபோல் இறந்த அல்லது இடம் பெயர்ந்த வாக்காளரது பெயரினை நீக்கம் செய்வதற்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் செய்வதற்கும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மைய அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் இன்று (நேற்று) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை), 13-ந்தேதி (ஞாயிற்றுகிழமை), 26-ந்தேதி (சனிக்கிழமை), 27-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) ஆகிய நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.

வலைதளம்

வாக்காளர் பட்டியல்களை http://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். மேலும், www.nvsp.in என்ற வலைதளத்திலும் வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், உதவி கலெக்டர்கள் சங்கீதா (திருவாரூர்), கீர்த்தனாமணி (மன்னார்குடி) மற்றும் அனைத்து தாசில்தார்கள், நகராட்சி ஆணையர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Next Story