4 குழந்தைகளுக்கு தலா ரூ 10 லட்சம் வைப்பு நிதி


4 குழந்தைகளுக்கு தலா ரூ 10 லட்சம் வைப்பு நிதி
x

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 4 குழந்தைகளுக்கு தலா ரூ 10 லட்சம் வைப்பு நிதி கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு அவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, பி.எம்.கேர் குழந்தைகளுக்கான 2021 திட்டத்தின் வாயிலாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருந்தார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 4 குழந்தைகளுக்கு பி.எம்.கேர் குழந்தைகளுக்கான 2021 திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் வைப்பு நிதிக்கான பத்திரம் தபால் புத்தகம், மருத்துவ காப்பீடு அட்டை (ஹெல்த் கேர் ஆயுஷ்மன் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா) மற்றும் பிரதமரால் குழந்தைகளுக்கு எழுதிய கடிதம் ஆகியவற்றை கலெக்டர் ஸ்ரீதர் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் வழங்கினார்.

மேலும் தமிழக முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட கொரோனா நோய்த்தொற்றால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கான மாதாந்திர பராமரிப்பு தொகை ரூ.3,000 வீதம் 3 குழந்தைகளுக்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய 3 மாதங்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை ரூ.9 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, விழுப்புரம் குழந்தைகள் நல குழும தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story