10 பேருக்கு கொரோனா பாதிப்பு


10 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

வேலூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையங்கள், பஜார், மார்க்கெட் மற்றும் தொற்று கண்டறியப்படும் இடங்களில் சளிமாதிரி பரிசோதனை செய்யப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் மேலும் 10 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

அதில் 5 பேர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story