கார் கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 10 பேர் படுகாயம்


கார் கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 10 பேர் படுகாயம்
x

கார் கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

திருச்சி

திண்டுக்கல் மாவட்டம், மொட்டணம்பட்டியை சேர்ந்த அழகர்சாமி(வயது 57), கற்பகம்(32), மதுமிதா(11), யோகித் சாய்(2), மோனிக்சாய்(3), பாண்டியம்மாள் உள்ளிட்ட 10 பேர் நேற்று ஒரு காரில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு, ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை செந்தில்குமார்(34) ஓட்டினார்.

திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த மாணிக்கம்பிள்ளை சத்திரம் அருகே சென்றபோது, நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த தடுப்பில் கார் மோதி கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 10 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கார் கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 10 பேர் படுகாயம்

1 More update

Next Story