கதண்டுகள் கடித்து பெண்கள் உள்பட 10 பேர் காயம்


கதண்டுகள் கடித்து பெண்கள் உள்பட 10 பேர் காயம்
x

வேதாரண்யம் அருகே கதண்டுகள் கடித்து பெண்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த மருதூர் வடக்கில் உள்ள ஒரு வயலில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நேற்று வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகள், வயலில் வேலை பார்த்த மருதூர் வடக்கு வழியான் செட்டி கட்டளை பகுதியை சேர்ந்த முருகையன் (வயது60), கமலம் (55), பஞ்சவர்ணம்(54), ராகினி (52), முத்துலெட்சுமி (50), மாலதி (33), கவியா, மலர் கொடி (30,) முத்துலட்சுமி (60), சரண்யா (35) ஆகிய 10 பேரை கடித்தது. இதில் காயம் அடைந்த அவர்கள் மயங்கி விழுந்தன. உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story