கோயம்பேடு மார்க்கெட்டில் 10 பேருக்கு கொரோனா


கோயம்பேடு மார்க்கெட்டில் 10 பேருக்கு கொரோனா
x

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பூந்தமல்லி,

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும். மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் முதலே முன்னெச்சரிக்கையாக அங்காடி நிர்வாக குழு சார்பில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மார்க்கெட் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அங்காடி நிர்வாக குழு அலுவலகத்தில் இருந்தபடியே சந்தையை தீவிரமாக கண்காணித்து தேவையற்ற கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுத்து வருகின்றனர்.

10 பேருக்கு கொரோனா

மேலும் கடந்த மாதம் 16-ந் தேதி முதலே கோயம்பேடு மார்க்கெட்டில் கடை நடத்தும் வியாபாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் என இதுவரை சுமார் 1500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 10 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தொடர்ந்து மார்க்கெட் வளாகத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் ஆய்வு செய்த கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள், முக கவசம் அணியாத வியாபாரிகள், கடை ஊழியர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர். மேலும் முககவசம் அணியாதவர்கள் மார்க்கெட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story