லாரி மீது பஸ் மோதி டிரைவர் உள்பட 10 பேர் காயம்


லாரி மீது பஸ் மோதி டிரைவர் உள்பட 10 பேர் காயம்
x

ஓசூரில் லாரி மீது அரசு பஸ் மோதி டிரைவர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

விபத்து

பெங்களூருவில் இருந்து இரும்பு காயில் பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சேலம் நோக்கி சென்றது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 47) என்பவர் ஓட்டி வந்தார். கிளீனராக அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் உடன் வந்தார். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தனியார் கண் மருத்துவமனை மேம்பாலத்தில் லாரி சென்று கொண்டிருந்தது.

அப்போது பின்னால் பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், லாரியை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக பஸ் கண்இமைக்கும் நேரத்தில் லாரி மீது மோதியது. இதில் லாரி தடுப்பு சுவரின் மீது ஏறி நின்றது.

10 பேர் காயம்

இந்த விபத்தில் பஸ் டிரைவர் தமிழ்செல்வன், கீளினர் சிவகுமார் மற்றும் பஸ்சில் வந்தவர்கள் என 10 பேர் லேசான காயம் அடைந்தனர். பின்னர் காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் விபத்துக்குள்ளான லாரி கிரேன் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story