சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது


சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை,

சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் பூராண்டாம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மணி என்பவரது தென்னந்தோப்பில் அரசால் தடை செய்யப்பட்ட சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்த ஒரு கும்பல், போலீசாரை பார்த்தவுடன் தப்பி செல்ல முயன்றது. உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக பூராண்டாம்பாளையத்தை சேர்ந்த கணேசன் (வயது 30), சுப்பிரமணியம் (53), செஞ்சேரியை சேர்ந்த கார்த்தி (29), மலைப்பாளையத்தை சேர்ந்த சாந்தகுமார் (32), பிரசாந்த் (32), பொங்களூரை சேர்ந்த சதீஷ்குமார் (31) உள்பட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரத்து 930, 4 சேவல்கள், 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story