சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் சிக்கினர்


சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 17 May 2023 6:00 AM IST (Updated: 17 May 2023 6:00 AM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் சிக்கினர்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே உள்ள எஸ்.அய்யம்பாளையம் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், சுல்தான்பேட்டை போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை பார்த்ததும் சிதறி ஓடினர்.

இதையடுத்து போலீசார் துரத்தி சென்று கோவை பீளமேட்டைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 48), அய்யாக்கண்ணு (60), சதீஸ்குமார் (35), கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் (54), பாப்பம்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (29), கணியூரைச் சேர்ந்த ஜெகதீசன் (31) எஸ்.அய்யம்பாளையத்தைச் சேர்ந்த பரமேஸ் குமார் (36) உள்பட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.54 ஆயிரத்து 300 மற்றும் 23 சேவல்கள், 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


Next Story