அதிக வட்டி தருவதாக கூறிபணமோசடி செய்த 10 பேர் அதிரடி கைது


அதிக வட்டி தருவதாக கூறிபணமோசடி செய்த 10 பேர் அதிரடி கைது
x

அதிக வட்டி தருவதாக கூறிபணமோசடி செய்த 10 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த ஒருவர், அப்பகுதியில் செயல்படும் தனியார் நிதிநிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் இந்த நிதி நிறுவனம் கூறியப்படி அதிக வட்டி தொகை தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்துள்ளார். மேலும் இந்த நிதி நிறுவனம் மீது 25-க்கும் மேற்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இந்த நிதி நிறுவனத்தை சேர்ந்த பங்குதாரர்கள் விஜயகுமார், குணசேகரன், தங்கராசு உள்பட 10 பேரை கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் இந்த நிதி நிறுவனத்தில் சுமார் ரூ.3 கோடி வரை பண மோசடி நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.


Next Story