சாராயம், மதுபாட்டில்கள் விற்ற 10 பேர் கைது
சாராயம், மதுபாட்டில்கள் விற்ற 10 பேர் கைது
கடலூர்
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் சாராயம் மற்றும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்டத்தில் 7 உட்கோட்டங்களுக்குட்பட்ட போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
இதில் மாவட்டம் முழுவதும் சாராயம் மற்றும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 30 மதுபாட்டில்கள் மற்றும் 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story