புகையிலை, லாட்டரி, மது விற்ற 10 பேர் கைது


புகையிலை, லாட்டரி, மது விற்ற 10 பேர் கைது
x

புகையிலை, லாட்டரி, மது விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

தாந்தோணிமலை பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதிகளில் கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த நவீன் (வயது 25), நிர்மலா (75), செல்வகுமார் (40), சந்திரசேகரன் (58) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.இதேபோல் தாந்தோணிமலை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் தோகைமலை அருகே ஆர்ச்சம்பட்டி பகுதியில் வீட்டின் பின்புறம் வைத்து மது விற்றதாக அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (43) என்பவரை தோகைமலை போலீசார் கைது செய்தனர்.இதேபோல் லாலாபேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஞ்சப்பட்டி கீரனூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மலர் (42), திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த சதீஷ் (35), கிருஷ்ணராயபுரம் மலையப்ப காலனியை சேர்ந்த பிரபு (41) ஆகியோர் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story