எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 10 பேர் படுகாயம்


எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 10 பேர் படுகாயம்
x

வாணியம்பாடி அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்

எருதுவிடும் விழா

வாணியம்பாடியை அடுத்த கணவாபுதூர் கிராமத்தில் 13-ஆம் ஆண்டு எருதுவிடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கோவிந்தபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கே.பழனி தலைமை தாங்கினார். ஊர் கவுண்டர் தங்கவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி தொகுதி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், ஒன்றிய குழு உறுப்பினர் முருகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. குறைந்த நேரத்தில் ஓடி குறிப்பிட்ட தூரத்தை கடந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

முதல் பரிசாக ரூ.60 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.50 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ.40 ஆயிரம் வழங்கப்பட்டது. மொத்தம் 44 பரிசுகள் விழா குழு சார்பில் வழங்கப்பட்டது.

10 பேர் படுகாயம்

விழா நடந்த பகுதியில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாடுகள் முட்டியதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


Next Story