கத்திமுனையில் 25 பவுன்நகை, ரூ.10 லட்சம் கொள்ளையடித்த 10 பேர் கைது


காங்கயம் அருகே வீடு பகுந்து தொழிலதிபர்- மனைவிடம் கத்தி முனையில் 25 பவுன்நகை மற்றும் ரூ.10 லட்சம் கொள்ளையடித்த 10 ேபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்

காங்கயம்

காங்கயம் அருகே வீடு பகுந்து தொழிலதிபர்- மனைவிடம் கத்தி முனையில் 25 பவுன்நகை மற்றும் ரூ.10 லட்சம் கொள்ளையடித்த 10 ேபரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கத்தி முனையில் கொள்ளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சாவடிபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 47). தொழிலதிபரான இவர் தேங்காய் பருப்பு களம் வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 30-ந் தேதி வீட்டில் தனது மனைவி செல்வி மற்றும் மகன்கள் நிதர்சன், தனுஷ் ஆகியோருடன் இருந்தார். அப்போது திடீரென அவரது வீட்டிற்குள் 7 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. அந்த கும்பல் குணசேகரன் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோரின் கழுத்தில் கத்தியை வைத்து செல்வியின் தாலி செயின் உட்பட பீரோவில் இருந்த நகை, பணம் என 25 பவுன் நகையும், ரூ.10 லட்சத்தையும் கொள்ளையடித்து சென்றது.

இதுகுறித்து காங்கயம் போலீசில் குணசேகரன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில் காங்கயம் துணை சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

10 பேர் கைது

இந்த தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ெகாண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தேங்காய் களத்தில் வேலை பார்த்து கொள்ளையில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் ஆராம்பூண்டியை சேர்ந்தவர்களான ராமநாதன்(35), அண்ணாதுரை(32), சவுந்தர்(25), வெள்ளிமலையை சேர்ந்த செல்வம்(37), கருமந்துறை சேர்ந்தவர்களான சூரியா(27), பிரசாந்த்(25) தாலேலும்புதூர் முருகன்(21), விளவனூர் சாமிதுரை(46), காட்டுவலசை சேர்ந்தவர்களான ஜான்கிருபா(37), விஜயகாந்த் (31) என மொத்தம் 10 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 16 பவுன் நகைகள், ரூ. 10 லட்சம் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் மீட்கப்பட்டது. மேலும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கைதான அவரையும் காங்கயம் நீதிமன்றதில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். அதை தொடர்ந்து காங்கயம் போலீஸ் நிலையத்திற்கு வந்த திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தனிப்படையினரை பாராட்டியதோடு மீட்கப்பட்ட நகைகள், பணம், கார்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த வழக்கில் தலை மறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தேங்காய் களத்தில் வேலை பார்த்த ஒருவர்தான் மற்றவர்களை அழைத்து வந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

.



Next Story