வீட்டில் 10½ பவுன் நகை மாயம்


வீட்டில் 10½ பவுன் நகை மாயம்
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-13T00:15:30+05:30)

வீட்டில் 10½ பவுன் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

தென்திருப்பேரை அருகே உள்ள சிவலிங்கபுரத்தை சேர்ந்த கார்த்திக்ராஜா மனைவி முத்தழகி (வயது 42). இவர் கடந்த 1-ந் தேதி கோவிலுக்கு சென்று விட்டு, நகைகளை கழட்டி வீட்டில் பீரோவில் வைத்து பூட்டி சாவியை அருகில் உள்ள அலமாரியில் வைத்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பீரோவை திறந்து பார்த்தபோது 10½ பவுன் நகை, வெள்ளி கொலுசு ஆகியவை மாயமாகி இருந்தது. இதுகுறித்து உடனடியாக ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story