மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன்நகை திருட்டு
மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன்நகை திருட்டு
சேவூர்,
சேவூர் அருகே அ.குரும்பபாளையம் கிரீன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 50). பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி ஜெயாரதி (42) மின்வாரிய ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் நேற்று காலை வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளனர். மகன் பாலமுருகன் கல்லூரிக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை இவர்களது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஒருவர், சண்முகத்தை செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக விரைந்து வந்த சண்முகம், மனைவி ஜெயாரதி ஆகியோர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை, 400 கிராம் வெள்ளி பொருள்கள், ரூ.10ஆயிரம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.