வெறிநாய்கள் கடித்து 10 செம்மறி ஆடுகள் பலி
பனப்பாக்கம் அருகே வெறிநாய்கள் கடித்து 10 செம்மறி ஆடுகள் பலியானது.
ராணிப்பேட்டை
பனப்பாக்கத்தை அடுத்த பெருவளையம் கிராமம், பெரியத்தெருவில் வசிக்கும் பாஸ்கர் என்பவரின் மனைவி வேண்டா. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை இவருக்கு சொந்தமான ஆட்டுகொட்டகையில் கட்டிவைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை அப்பகுதியில் சுற்றிதிரியும் வெறிநாய்கள் கடித்து குதறியது. இதனால் ரத்தவெள்ளத்தில் மிதந்த 10 செம்மறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில் சுற்றித்திரியும் வெறி நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
Related Tags :
Next Story