ஆட்டோ உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு


ஆட்டோ உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு
x

தகவல் தெரிவிக்காமல் வாகனத்தை பறிமுதல் செய்த வழக்கில் ஆட்டோ உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என வங்கிக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை

மதுரை,

மதுரை புதூரைச் சேர்ந்தவர் வைரகலை. இவர் மதுரை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் கடந்த 2015-ம் ஆண்டு ஆட்டோ வாங்குவதற்காக தனியார் வங்கியில் கடன் பெற்றிருந்தேன். பின்னர் அந்த தொகையை மாதந்தோறும் செலுத்தி வந்தேன். சில மாதங்கள் தவணைத் தொகையை செலுத்த தாமதமானது. இதையடுத்து எனக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல் எனது ஆட்டோவை தனியார் வங்கி பறிமுதல் செய்தது.

பின்னர் நான் உரிய தொகையை செலுத்த முன்வந்த போதும் வங்கி நிர்வாகம் அதை ஏற்கவில்லை. எனவே ஆட்டோ இன்றி வருமானமும் பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டது. எனவே எனக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை மதுரை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டின் தலைவர் பாரி, உறுப்பினர்கள் விமலா, வேலுமணி ஆகியோர் விசாரித்தனர். முடிவில், மனுதாரருக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் அவரது வாகனத்தை பறிமுதல் செய்தது.

அவர் உரிய தொகையை செலுத்த முன் வந்த போதும் அதை ஏற்க மறுத்தது ஆகியவை வங்கியின் சேவை குறைபாடு ஆகும். எனவே மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடும், 5 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவுத் தொகையையும் தனியார் வங்கி செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.


Related Tags :
Next Story