கட்டிட தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை


கட்டிட தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

கோயம்புத்தூர்

கோவை

மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

மாணவி பாலியல் பலாத்காரம்

சேலம் மோரூர் அருகே உள்ள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28), கட்டிட தொழிலாளி. இவர் 2019-ம் ஆண்டு கோவை ஒண்டிப்புதூரில் வசித்து வந்தார். அப்போது அந்த பகுதியில் 12-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி அடிக்கடி பின் தொடர்ந்து சென்றார். ஆனால் மாணவி காதலிக்க மறுத்ததால், அவரை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்தார். மேலும் அவர் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார். இது தொடர்பாக கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

10 ஆண்டு சிறை

இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து, நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் உத்தரவிட்டார்.

மற்றொரு வழக்கு

இதேபோல், கோவில்பாளையம் அருகேயுள்ள கீரணத்தம் சாம்பிராணி குட்டை பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (40). இவர் கடந்த 2020-ம் ஆண்டில் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோவை போக்சோ கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ரங்கசாமிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story