தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை


தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 30 Sept 2023 12:15 AM IST (Updated: 30 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மனநலம் பாதித்த பெண் பாலியல் பலாத்காரம் அளித்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

சிவகங்கை

சிவகங்கை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் முனிசாமி (வயது57). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ஜூன் வரை மனநலம் பாதிக்கப்பட்ட வாய் பேச முடியாத 27 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

இது பற்றிய தகவல் அறிந்த அந்தப் பெண்ணின் தாயார் முனிசாமி வீட்டிற்கு சென்று கேட்டபோது, முனிசாமி அவரது மனைவி, மகன், மற்றும் உறவினர்கள் அந்தப் பெண்ணின் தாய், தந்தையை தாக்கினார்களாம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி முனிசாமி, அவரது மனைவி ஈஸ்வரி, மகன் முனீஸ்வரன் மற்றும் உறவினர்கள் செல்வி, தவம் என்ற பாலசுப்ரமணியன் ஆகிய 5 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை சிவகங்கை மகளிர் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விஜய நிர்மலா ஆஜரானார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி சரத் ராஜ், குற்றம் சாட்டப்பட்ட முனிசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் இது குறித்து கேட்க வந்த அந்த பெண்ணின் பெற்றோரை தாக்கிய வழக்கில் ஈஸ்வரி, முனீஸ்வரன் மற்றும் செல்வி ஆகியோருக்கு தலா ரூ.2000 அபராதம் விதித்தார்.

மேலும் தவம் என்ற பாலசுப்பிரமணியன் விடுதலை செய்யப்பட்டார்.


Related Tags :
Next Story