ரவுடிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை


ரவுடிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியை வெட்டி பணம் பறித்த வழக்கில் ரவுடிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து இரணியல் கோர்ட்டு உத்தரவிட்டது.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

தொழிலாளியை வெட்டி பணம் பறித்த வழக்கில் ரவுடிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து இரணியல் கோர்ட்டு உத்தரவிட்டது.

தொழிலாளிக்கு வெட்டு

குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 37). செங்கல்சூளை தொழிலாளியான இவர் கடந்த 2003-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி அன்று திருவிடைக்கோடு பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவுடியான மணி (43) என்பவர் சிதம்பரத்தை வழிமறித்தார். பின்னர் வெட்டுக்கத்தியால் ரூ.500 கேட்டு மிரட்டினார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் வெட்டுக்கத்தியால் வெட்டி ரூ.200யை பறித்தார். இதில் காயமடைந்த சிதம்பரம் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ரவுடிக்கு சிறை தண்டனை

மேலும் இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை இரணியல் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கில் இரணியல் சார்பு நீதிபதி செல்வபாண்டி தீர்ப்பளித்தார். அதில், ரவுடி மணிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் அரசு தரப்பு சார்பில் குற்றவியல் கூடுதல் வக்கீல் செந்தில் மூர்த்தி ஆஜரானார்.


Next Story