சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை


சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கோயம்புத்தூர்


சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிறுமி கர்ப்பம்

கோவை எட்டிமடை பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி என்ற ராஜன் (வயது 35). இவர் கோவையை சேர்ந்த 11-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவரை கடந்த 2019-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அவர் இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் அவர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள்

எனவே அவர்களிடம் கூற வேண்டாம் என்று சிறுமியிடம் வெள்ளியங்கிரி தெரிவித்து உள்ளார். இதனால் அந்த சிறுமி வீட்டில் யாரிடமும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் சிறுமி படித்த பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது. அப்போது சிறுமி தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி உள்ளார்.

உடனே சிறுமியின் தாயை வரவழைத்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் அவரிடம் கேட்டார். அப்போது சிறுமி தன்னை வெள்ளியங்கிரி பாலியல் பலாத்காரம் செய்ததை கூறி அழுதார். வெள்ளியங்கிரி சிறுமிக்கு உறவுமுறையில் சித்தப்பா ஆகும்.

10 ஆண்டு சிறை

இதுகுறித்த புகாரின் பேரில் கடந்த 2020-ம் ஆண்டு அனைத்து மகளிர் போலீசார் வெள்ளியங்கிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் சிறுமியை கர்ப்பமாக்கிய வெள்ளியங்கிரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்தார்.


Next Story