புத்தாண்டையொட்டி விதிமீறல் தொடர்பாக 100 வழக்குகள் பதிவு


புத்தாண்டையொட்டி விதிமீறல் தொடர்பாக 100 வழக்குகள் பதிவு
x

திருவண்ணாமலையில் புத்தாண்டையொட்டி விதிமீறல் தொடர்பாக 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை


திருவண்ணாமலையில் புத்தாண்டையொட்டி விதிமீறல் தொடர்பாக 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆங்கில புத்தாண்டு

2023-ம் ஆங்கில புத்தாண்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. புத்தாண்டை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வாழ்த்துகளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் பெரும்பாலான பகுதிகளில் இளைஞர்கள் பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வாகன சோதனை

திருவண்ணாமலை நகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

புத்தாண்டை கொண்டாடும் வகையில் திருவண்ணாமலை மாட வீதியில் காந்தி சிலை எதிரில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் தலைமையிலான போலீசார் கேக் வெட்டி கொண்டாடினர்.

அப்போது போலீசார் பொதுமக்களுக்கு கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

100 வழக்குகள் பதிவு

புத்தாண்டையொட்டி மாவட்டத்தில் நடத்திய சோதனையில் மது அருந்தி விட்டு வாகனங்கள் இயக்கியது, அதிவேகமாக வாகனங்களை இயக்கியது போன்ற விதிமீறல் தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story