துறைமுகத்தில் 100 கண்டெய்னர் புழுங்கல் அரிசி முடக்கம்


துறைமுகத்தில் 100 கண்டெய்னர் புழுங்கல் அரிசி முடக்கம்
x
தினத்தந்தி 14 Sept 2023 12:45 AM IST (Updated: 14 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில் வரி விதிப்பு தொடர்பான பிரச்சினை காரணமாக துறைமுகத்தில் ஏற்றுமதிக்கான 100 கண்டெய்னர் புழுங்கல் அரிசி முடங்கியுள்ளதாகவும் மத்திய அரசு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என ஏற்றுமதி வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விருதுநகர்

விருதுநகர்

மத்திய அரசு புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில் வரி விதிப்பு தொடர்பான பிரச்சினை காரணமாக துறைமுகத்தில் ஏற்றுமதிக்கான 100 கண்டெய்னர் புழுங்கல் அரிசி முடங்கியுள்ளதாகவும் மத்திய அரசு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என ஏற்றுமதி வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வரிவிதிப்பு

மத்திய அரசு அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்ததோடு புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு கடந்த ஆகஸ்டு 25-ந்தேதி முதல் 20 சதவீதம் வரி விதித்தது. இந்நிலையில் புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்காக சென்னை துறைமுகத்திற்கு 100 கண்டெய்னரில் கொண்டுவரப்பட்ட புழுங்கல் அரிசியை துறைமுக அதிகாரிகள் ஏற்றுமதி வரி விதிப்பு பிரச்சினை காரணமாக ஏற்றுமதிக்கு அனுமதி மறுத்து முடக்கி உள்ளனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய நிதி அமைச்சகம். ஆகஸ்டு 25-ந் தேதி இரவு 10:49 மணிக்குள் துறைமுகத்திற்குள் கண்டெய்னர்களில் வந்த புழுங்கல் அரிசியை வரிவிதிப்பு இல்லாமல் ஏற்றுமதி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் துறைமுக அதிகாரிகள் இது குறித்து முடிவேதும் எடுக்காமல் தொடர்ந்து முடக்கி உள்ளனர்.

தடைபடும் நிலை

மேலும் ஆகஸ்டு 25-ந் தேதிக்கு முன்பு வங்கியில் ஏற்றுமதிக்கான லெட்டர் ஆப் கிரெடிட் பெற்றிருந்தால் அக்டோபர் 16-ந் தேதி வரை வரிவிதிப்பு இல்லாமல் ஏற்றுமதி செய்யலாம் என்றும் மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. ஆனாலும் துறைமுக அதிகாரிகள் இந்த விளக்கத்தையும் ஏற்க தயாராக இல்லாத நிலையில் புழுங்கல் அரிசி ஏற்றுமதி முற்றிலும் தடைபடும் நிலை உள்ளது. இதேபோன்று மற்ற துறைமுகங்களிலும் இதே நிலை நீடிப்பதாக கூறப்படுகிறது.

வலியுறுத்தல்

இது குறித்து ஏற்றுமதி வணிகர்கள் தரப்பில், மத்திய அரசு உரிய விளக்கம் அளித்த பின்பும் துறைமுக அதிகாரிகள் புழுங்கல் அரிசியை ஏற்றுமதி செய்ய அனுமதிக்காமல் முடக்கி வைத்திருப்பது ஏற்புடையதல்ல என்றும் இது குறித்து உடனடியாக மத்திய நிதி அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகம் விளக்கம் அளித்து முடக்கி வைக்கப்பட்டுள்ள புழுங்கல் அரிசியை ஏற்றுமதிக்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


Next Story