100 நாள் பணியாளர்கள் திடீர் சாலை மறியல்
ஆம்பூர் அருகே 100 நாள் பணியாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வெங்கடசமுத்திரம் பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக 100 நாள் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் 100-க்கு மேற்பட்ட பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் போலீசார் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பணியாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story