100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்


100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
x

100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்


விருதுநகர் அருகே உள்ள வடமலைகுறிச்சி கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்ட மாவட்ட குறை தீர்ப்பு அதிகாரி பெரியசாமி, 100 நாள் வேலை திட்ட பணியினை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியாளர்கள் வேலைக்கான உபகரணங்கள் இல்லாமல் இருந்த நிலையில் பணித்தள பொறுப்பாளர் கலாராணியிடம் விளக்கம் கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர் திட்டப்பணியாளர்களிடம் எந்தவித விளக்கமும் கேட்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் பணித்தள பொறுப்பாளர் கலா ராணி வேலைக்கு வர இயலாது என்று சொல்லிவிட்ட நிலையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பஞ்சாயத்து தலைவர் விஜயலட்சுமியிடம் குறை தீர்ப்பு அதிகாரியின் செயல்பாடுகளை கண்டித்து தாங்கள் வேலைக்கு வராமல் புறக்கணிப்பதாக மனு கொடுத்துவிட்டு வேலைக்கு வரவில்லை. இதுபற்றி பஞ்சாயத்து தலைவர் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, பணித்தள பொறுப்பாளர் கலாராணி வேலைக்கு வராத நிலையில் பணியாளர்கள் வேலைக்கு வர முடியாது என்று புறக்கணித்ததாகவும், அவர்கள் கொடுத்துள்ள மனு குறித்து உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.



Next Story