நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் 100 பேர் தேர்ச்சி


நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் 100 பேர்  தேர்ச்சி
x

சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவின்படி விருதுநகர் மாவட்டத்தில் 100 அரசு பள்ளி மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

விருதுநகர்

சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவின்படி விருதுநகர் மாவட்டத்தில் 100 அரசு பள்ளி மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்கள்

விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் 547 பேர் நீட் தேர்வு எழுதினர். இதில் தேர்ச்சி மதிப்பெண் ஆன 93-க்கு மேல் பெற்றவர்கள் 100 பேர் ஆவர். இதில் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 3 பேர். 200 முதல் 300-க்குள் மதிப்பெண் பெற்றவர்கள் 4 பேர்.

150 முதல் 200 மதிப்பெண்களுக்குள் பெற்றவர்கள் 12 பேர். 100 முதல் 150-க்குள் பெற்றவர்கள் 58 பேர். 93 முதல் 100 வரை மதிப்பெண் பெற்றவர்கள் 23 பேர். ஆக மொத்தம் 100 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

முதல் மாணவி

மாவட்டத்தில் தும்முசின்னம்பட்டி அரசு பள்ளி மாணவி மாதவி 390 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். செம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அலெக்ஸ் பாண்டியன் 341 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடம் பெற்றுள்ளார். சத்திரரெட்டியபட்டி அரசு பள்ளி மாணவி ஸ்ரீநிதி 321 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடம் பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்ற 100 மாணவ-மாணவிகளும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்கள்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாவட்டத்தில் 2020-ல் 11 மாணவர்களும், 2021-ல் 11 மாணவர்களும் இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவக்கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்தது.


Next Story