பொள்ளாச்சியில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


பொள்ளாச்சியில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட கடை வீதி, சத்திரம் வீதி உள்பட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாகவும், விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செல்வம், செந்தில் மற்றும் பணியாளர்கள் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. 20 கடைகளில் இருந்து பிளாஸ்டிக் கவர், டம்ளர் உள்பட 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூ.8500 அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கிடையில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு சென்று பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story