தடை செய்யப்பட்ட 100 கிலோபிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

பரமத்திவேலூரில் தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல்
பரமத்திவேலூர்
பரமத்திவேலூரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதாக வந்த புகாரை எடுத்து வேலூர் பேரூராட்சி செயல்அலுவலர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் மற்றும் தூய்மை பணியாளர்கள் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 100 கிலோ பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் பறிமுதல் செய்தனர். மேலும் பாலித்தீன் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு ரூ.4,300 அபராதம் விதித்து பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story






