100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க அனுமதி: பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் ரெயில்களின் பயண நேரம் குறைந்தது-ரெயில்வே அதிகாரிகள் தகவல்


100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க அனுமதி:  பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் ரெயில்களின் பயண நேரம் குறைந்தது-ரெயில்வே அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் ரெயில்களின் பயண நேரம் குறைந்து உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் ரெயில்களின் பயண நேரம் குறைந்து உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயண நேரம் குறைந்தது

திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக போத்தனூர் மற்றும் பாலக்காடு வரையிலான வழித்தடம் அகலரெயில் பாதையாக மாற்றப்பட்டு ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தற்போது மின் மயமாக்கப்பட்டு திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரை மின்சார ரெயில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அந்த ரெயில் பாதையில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது திருச்செந்தூரில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு செல்லும் ரெயில், சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் ரெயில்களின் பயண நேரம் குறைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

இன்று முதல் அமல்

ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் நேர அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் ரெயில் பொள்ளாச்சிக்கு இரவு 8.30 மணிக்கு வந்து 8.35 மணிக்கு புறப்பட்டு சென்றது. தற்போது அந்த ரெயில் இரவு 8.13 மணிக்கு வந்து 8.18 மணிக்கு புறப்படுகிறது. இதேபோன்று சென்னை-பாலக்காடு ரெயில் பொள்ளாச்சிக்கு காலை 8.42 மணிக்கு வந்து 8.45 மணிக்கு புறப்பட்டு சென்றது. தற்போது அந்த ரெயில் காலை 8.27 மணிக்கு வந்து, 8.30 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த புதிய நேர மாற்றம் இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதற்கிடையில் பிளாட்பார பகுதிகளில் இதற்கு முன் ரெயில்கள் 15 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. தற்போது 30 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story