தேர்வு கட்டணம் 100 சதவீதம் உயர்வு


தேர்வு கட்டணம் 100 சதவீதம் உயர்வு
x

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கான கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பயிற்சி கட்டணமும் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

விருதுநகர்


அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கான கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பயிற்சி கட்டணமும் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

சான்றிதழ் தேர்வு

இதுகுறித்து அரசு உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆண்டுக்கு 2 முறை பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு தேர்வின் போதும் 3 மடங்கு அதிகரித்து வருகிறது. ஆனால் இதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் தற்போதைய நிலையில் தேர்வு கட்டணத்தை 100 சதவீதமும், பயிற்சி கட்டணத்தை 50 சதவீதமும் உயர்த்தி உத்தரவிடுமாறு தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

கட்டணம் உயர்வு

அவரது கருத்துருவை அரசு கவனமுடன் ஆய்வு செய்து விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணத்தை 100 சதவீதமும், பயிற்சி கட்டணத்தை 50 சதவீதமும் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

அதன்படி விண்ணப்ப கட்டணம் ரூ.15-ல் இருந்து ரூ.30 ஆகவும் தேர்வு கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ. 1,000 ஆகவும், பயிற்சி கட்டணம் ரூ.2 ஆயிரத்திலிருந்து இருந்து ரூ.3 ஆயிரம் ஆகவும் உயர்த்தி நிர்ணயிக்கப்படுகிறது. பயிற்சி காலம் தொடர்பாக பின்வரும் திருத்தம் செய்யப்படுகிறது.

பயிற்சி மையங்கள் அல்லது பாலிடெக்னிக்குகளில் தேர்விற்கு பயிற்சி பெறும் மாணவர்கள் குறைந்தபட்சம் 120 மணி நேரம் கணினி பயிற்சி பெற வேண்டும். தனித்தேர்வர்கள் தாங்கள் 120 மணி நேரம் கணினி பயிற்சி பெற்றதற்கு சுய உறுதிமொழி அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு நியமனம் பெற அரசு கணினி சான்றிதழ் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story