சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி


சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
x

சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

கரூர்

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையில் உள்ள சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும்.

மாணவர் ராஜேஷ் 596 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவர் திவாகர் 585 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும், மாணவிகள் தேஜாஸ்ரீ, சரண்யா ஆகியோர் 583 மதிப்பெண்கள் 3-வது இடம் பெற்றுள்ளனர்.

இயற்பியல் பாடத்தில் 2 பேரும், வேதியியலில் 3 பேரும், கணிதத்தில் 2 பேரும், உயிரியலில் ஒருவரும், கணினி அறிவியலில் 8 பேரும், கணக்குப்பதிவியலில் 3 பேரும், வணிகவியலில் 3 பேரும், வணிக கணிதத்தில் ஒருவரும், கணினிபயன்பாடுகள் பாடத்தில் 2 பேரும் என மொத்தம் 25 பேர் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். 550-க்கு மதிப்பெண்களுக்கு மேல் 18 பேரும், 500-க்கு மேல் 52 பேரும் பெற்றுள்ளனர். பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவர் கருப்பண்ணன், தாளாளர்கள் பாண்டியன், சித்ராதேவி, நிர்வாக அலுவலர் கணபதி ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். மேலும் சாதனை படைக்க பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story