ராசம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி


ராசம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
x

ராசம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கரூர்

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் பி.கே. நகரில் உள்ள ராசம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் அனைவரும் ேதர்ச்சி பெற்றுள்ளனர். இது 100 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

மாணவி ஸ்ரேயா ஸ்ரீ 587 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி கீதாஸ்ரீ 581 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும், மாணவிகள் திவ்யாஸ்ரீ, சுவேதா ஆகியோர் 570 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும் பெற்றுள்ளனர்.

வணிகவியல், கணக்குப்பதிவியல், வேதியியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல் பாடங்களில் தலா ஒருவர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பள்ளியின் தலைவரும், தாளாளருமான வடிவேல், செயலாளர் ஈஸ்வரி வடிவேல், ஆலோசகர் கார்த்திகா குமரேசன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், பிரியங்கா பிரேம்குமார், மெட்ரிக் பள்ளியின் முதல்வர் பார்த்தசாரதி, கல்வியியல் கல்லூரி முதல்வர் சந்திரசேகரன், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story