விஞ்ஞானி வீட்டில் 100 பவுன் நகை மாயம்


விஞ்ஞானி வீட்டில் 100 பவுன் நகை மாயம்
x

ஓய்வுபெற்ற விஞ்ஞானி வீட்டில் 100 பவுன் நகை மாயமானது.

சென்னை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த கரசங்கால் எல்.ஐ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் பால் (வயது 85). ஓய்வுபெற்ற விஞ்ஞானி. இவருடைய 2-வது மனைவி சசிகலா (67). இவர்களுக்கு ஸ்ரீதேவி (48) என்ற மகளும், ஹேமா (27) என்ற பேத்தியும் உள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பால் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 100 பவுன் நகை மாயமானதை கண்டு சசிகலா அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், கணவர் பாலிடம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

நகை மாயமானபோது வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். வீட்டில் வேலை செய்து வரும் பணிப்பெண் மற்றும் பால், சசிகலாவிடம் போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் அதில் பதிவான காட்சிகளையும் பார்த்து விசாரணை செய்யப்படுகிறது. 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story