மதுரையில் 100 ரவுடிகள் கைது


மதுரையில் 100 ரவுடிகள் கைது
x

மதுரை நகர், புறநகரில் முன்எச்சரிக்கையாக 100 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


மதுரை நகர், புறநகரில் முன்எச்சரிக்கையாக 100 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

பாதுகாப்பு பணி தீவிரம்

ஆங்கில புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மதுரை நகர் மற்றும் புறநகரில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்துவிடாமல் தடுக்கும் வகையில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பழைய குற்றவாளிகள் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் காரணமாக, குற்ற சம்பவங்களில் மீண்டும் ஈடுபட தயாராகி வரும் ரவுடிகளில் பலரை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.

100 ரவுடிகள் கைது

அதன்படி, ஒத்தக்கடை, கருப்பாயூரணி, வாடிப்பட்டி, திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, மாநகரில் தல்லாகுளம், செல்லூர், தெப்பக்குளம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருந்து சுமார் 100 ரவுடிகள் இதுவரை கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர தப்பி ஓடிய மேலும் பலரை தேடும் பணியும் நடக்கிறது.


Related Tags :
Next Story