தியாகதுருகம் வாரச்சந்தையில் சதம் அடித்த தக்காளி விலை


தியாகதுருகம் வாரச்சந்தையில் சதம் அடித்த தக்காளி விலை
x
தினத்தந்தி 2 July 2023 12:15 AM IST (Updated: 2 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் வாரச்சந்தையில் தக்காளி விலை நேற்று சதம் அடித்தது.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தமிழகத்தில் தக்காளி விளைச்சல் குறைந்ததாலும், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததாலும் கடந்த சில நாட்களாகவே, சென்னை, நெல்லை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் நேற்று நடந்த வாரச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சதம் அடித்த தக்காளி விலை குறித்து வியாபாரிகள் கூறுகையில், தியாகதுருகம் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தக்காளி கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் நடைபெற்ற வாரச்சந்தையில் தக்காளி கிலோ ஒன்று ரூ.40-க்கு விற்பனையானது. ஆனால் நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் குறைந்த அளவு தக்காளியை வாங்கிச் சென்றனர். தக்காளி அதிகளவு சாகுபடி செய்யப்படும் பல்வேறு மாநிலங்களில் கன மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் குறைந்து போனது. இதனால் தக்காளி விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இன்னும் தக்காளி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறினர்.


Next Story