சிவில் நீதிபதி பதவிகளுக்கான தேர்வை 1,000 பேர் எழுதினர்


சிவில் நீதிபதி பதவிகளுக்கான தேர்வை 1,000 பேர் எழுதினர்
x

சிவில் நீதிபதி பதவிகளுக்கான தேர்வை 1,000 பேர் எழுதினர்

திருச்சி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட விதிகளின்படி தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையில் சிவில் நீதிபதி பதவிகளுக்கான தேர்வு நேற்று திருச்சி மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரம் பேர் கலந்து கொண்டு எழுதினர். இதில் 88 பேர் தேர்வு எழுத வரவில்லை. இது 91.91 சதவீதமாகும். மாவட்டங்களில் நடந்த தேர்வு மையங்களை கண்காணிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 9 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவது வீடியோ பதிவு செய்யப்பட்டது. அனைத்து தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு பணிகளில் போலீசாரும், துப்பாக்கி ஏந்திய போலீசாரும் ஈடுபட்டனர். இந்த தேர்வினை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story