1,000 பனைமர விதைகள் நடும் விழா
கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் 1,000 பனைமர விதைகள் நடும் விழா நடந்தது.
சேத்துப்பட்டு
கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் 1,000 பனைமர விதைகள் நடும் விழா நடந்தது.
பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் சார்பில் 1,000 பனை விதைகளை நடும் விழாவை நடத்தினர். இதனை பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்்கு தலைமை ஆசிரியர் தமிழரசி தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளரும் இயற்கை ஆர்வலருமான கணித பட்டதாரி ஆசிரியர் முரளி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் சிறப்புரையாற்றுகையில் பனை மரம் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் நடுவதன் அவசியம் குறித்தும் சிறப்புரையாற்றினார்.பனை விதை நடும் பணியில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் ஜெகராஜ் ஆனந்தி, விமலி, ரூபிணி, பத்மபிரியாஆகியோர் ஈடுபட்டனர். மேலும் பள்ளியில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.