முதல் நாள் சிறப்பு முகாமில் 10 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு


முதல் நாள் சிறப்பு முகாமில் 10 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு
x

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்காக நடந்த முதல் நாள் சிறப்பு முகாமில் 10 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

வேலூர்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்காக நடந்த முதல் நாள் சிறப்பு முகாமில் 10 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

மகளிர் உரிமைத்தொகை திட்டம்

தமிழகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டம் அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்யும் வகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டது. தகுதியுடையவர்கள் அதை பதிவு செய்யும் அறிவுறுத்தப்பட்டது.

இதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு 2 கட்டமாக பணிகள் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 699 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டது. தன்னார்வலர்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்டன.

இந்த முகாம்களுக்கு பொதுமக்கள் பலர் சென்று ஆர்வமுடன் பதிவு செய்தனர். இந்த முகாம்களில் 3,05,627 பேர் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள பெண்கள் விண்ணப்பிக்காமல் இருந்தனர். அவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

10 ஆயிரம் பேர் பதிவு

இந்தநிலையில் அவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விடுபட்டவர்களுக்கு 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி மாவட்டம் முழுவதும் நேற்று சிறப்பு முகாம்கள் நடந்தது.

பலர் ஆர்வமுடன் சென்று பதிவு செய்தனர். முதல் நாள் நடந்த முகாமில் 10,073 பேர் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இன்றும் 2-வது நாளாக சிறப்பு முகாம் நடந்தது. நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story